இந்து மக்கள் சார்பில் சனாதனம் போற்றும் பொங்கல்- திமுக எம்.எல்.ஏ பங்கேற்பு

கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் (திமுக) மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் கே. சரவணன் (காங்கிரஸ்) ஆகிய இருவரும் ஆர்வமாக பங்கேற்றனர்.

Jan 13, 2024 - 23:42
0 164
இந்து மக்கள் சார்பில் சனாதனம் போற்றும் பொங்கல்- திமுக எம்.எல்.ஏ பங்கேற்பு

இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதனம் போற்றும் பொங்கல் விழாவில் திமுக எம்.எல்.ஏ பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் பாணாதுறை சன்னதி தெருவில் நேற்று மாலை இந்து மக்கள் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி ஏற்பாட்டின் பேரில், சனாதனம் போற்றும், கலாச்சார பொங்கல் என்ற பெயரில், 50க்கும் அடுப்புகளில் புதிய மண் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடைபெறும் இந்த சனாதனம் போற்றும், கலாச்சார பொங்கல் விழாவில் முன்னாள் எம்எல்ஏ இராம இராமநாதன் (அதிமுக), பாரதீய ஜனதா கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், பல்வேறு இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

இவ்விழாவில்,  கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் (திமுக) மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் கே சரவணன் (காங்கிரஸ்) ஆகிய இருவரும் ஆர்வமாக பங்கேற்று, பொங்கல் பானையில் பச்சரிசி இட்டு  சனாதனம் போற்றும், கலாச்சார பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வு பலரையும் வியக்க வைத்தது.இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமாக பங்கேற்று பொங்கல் வைத்து பொங்கி, படையலிட்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User