வெள்ள நிவராண பணிகளை பொதுமக்கள் பாராட்டி இருக்கின்றனர்- சபாநாயகர் அப்பாவு 

பல பேர் குறைசொல்வது பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றியதை கொச்சைப்படுத்துவதை போன்றது.

Dec 13, 2023 - 17:09
Updated: 3 years ago
0 198
வெள்ள நிவராண பணிகளை பொதுமக்கள் பாராட்டி இருக்கின்றனர்- சபாநாயகர் அப்பாவு 

வெள்ள நிவராண பணிகளை பொதுமக்கள் பாராட்டி இருக்கின்றனர் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கோவை விமான  நிலையத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர்  கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றது.கோவையில் இன்று பள்ளி,கல்லூரி என இரு இடங்களில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. 

வெள்ள நிவராண பணிகளை பொதுமக்கள் பாராட்டி இருக்கின்றனர்.மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக 
பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி இருக்கின்றது.பல பேர் குறைசொல்வது பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றியதை கொச்சைப்படுத்துவதை போன்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு  உதவிகள் செய்யப்பட்டுள்ளது.நிவாரண நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர்.அவரிடம் சொல்லி சீக்கிரம் நிவாரண நிதி வாங்கி கொடுக்க வேண்டும் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User