அரிதிலும் அரிதான வெள்ளை நாகம்.... வியந்து பார்த்த மக்கள்....

Feb 19, 2024 - 22:01
0 606
அரிதிலும் அரிதான வெள்ளை நாகம்.... வியந்து பார்த்த மக்கள்....

உலகம் முழுவதும் அரிய வகை நாகங்களில் வெள்ளை நாகங்களுக்கென்று தனியிடம் உண்டு. இந்த வகை நாகங்கள் இந்தியா, சீனா, வியட்நாம், தெற்காசிய நாடுகளில் தான் அதிகமும் காணப்படுகின்றன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பச்சாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் இரும்பு கடையில் அரிய வகையான வெள்ளை நாகம் இருப்பதை அங்கு வேலை செய்தவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து பாம்பு பிடி வீரர் கடலூர் செல்லா என்பவருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பச்சாங்குப்பம் பகுதிக்கு விரைந்து வந்த செல்லா அங்கிருந்த 5 அடி நீளம் கொண்ட வெள்ளை நாகப் பாம்பை லாபகமாக மீட்டு காப்பு காட்டில் விடுவித்தார். அரிதிலும் அரிதான வெள்ளை நாகத்தை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்ததுடன் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User