‘பேச்சி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா.?
திகில் திரைக்களத்துடன் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது ‘பேச்சி’ திரைப்படம்
அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி இயக்க, வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட், வெருஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காயத்ரி, பாலசரவணன், தேவ் ராம்நாத் ஆகியோர் நடித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ’பேச்சி’
காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்ற 5 நண்பர்கள் அங்கு சந்திக்கும் திகில் அனுபவங்களை, வித்தியாசமான கதைக்களத்தோடு மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் திகில் ஜானர் என்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ‘பேச்சி’ .

வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று 25 நாட்களை கடந்து ஓடிய ‘பேச்சி’ விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. படம் வெளியாவதற்கு முன்னரே திரைப்படம் குறித்த விமர்சனங்கள் படத்தை வெகுவாக பாராட்டும் விதமாகவே அமைந்தது
திகில் படமாக இருந்தாலும், அதை வழக்கமான பாணியில் சொல்லாமல், வித்தியாசமான கோணத்தில் சொன்னதோடு, ரசிகர்களுக்கு புதுவிதமான திகில் அனுபவத்தை கொடுத்த ‘பேச்சி’ திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளங்களில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பல மொழிகளில் ‘பேச்சி’ வெளியாக உள்ளது.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)