பாவூர்சத்திரம்:தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

தனது தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த முருகனையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர். 

Jan 11, 2024 - 18:39
0 323
பாவூர்சத்திரம்:தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

பாவூர்சத்திரம் அருகே பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுப்பையா என்பவரது மனைவி சிவந்திப்பூ(வயது 80) கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். 

இவருக்கு நான்கு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.அனைவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் உள்ளூரில் வசித்து வந்த மகன்களில் ஒருவரான முருகன் (வயது 50 ) அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்கு சென்றதாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும் முதியோர் பென்ஷன் மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவில் மதுபோதையில் வந்த முருகன் சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் ஓட்டு வீட்டை எழுதி தருமாறும் பணம் கேட்டும்  தகராறில் ஈடுபட்டுள்ளார்.அதற்கு மூதாட்டி சிவந்திப் பூ மறுத்துள்ளார்.மேலும் மகன் முருகனிடம் தனக்கு நோய்வாய்ப்பட்டு இருப்பதால் மாத்திரை வாங்கி தருமாறும்  கூறியுள்ளார். முருகனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒரு மகனை மெடிக்கலுக்கு சென்று மருந்து வாங்க அனுப்பிய பொழுது அங்கு சிறுவன் மருந்து கேட்டதால் மருந்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதனை முருகனிடம் சிறுவன் தெரிவித்த நிலையில் நீ உயிரோடு இருப்பதே தேவையில்லாதது என கூறி  ஆத்திரமடைந்து  சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இருக்கியும்  வீட்டினுள் கிடந்த கல்லை கொண்டு தலையில் போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவந்திப்பூ சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்.ஐ கோவிந்தராஜ், தனிப்பிரிவு ஏட்டு பாலமுருகன், நம்பி உள்ளிட்ட போலீசார்  உயிரிழந்த சிவந்திப்பூவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனது தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த முருகனையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர். 

போலீசார் விசாரணையில்  முருகன் மது அருந்தும் பழக்கம் கொண்டவராகவும் மூதாட்டிக்கு வரும் பென்ஷன் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்புடன் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாயையும் சேர்த்து கேட்டதாகவும்,  ஓட்டு வீட்டை தனக்கு  எழுதித்தருமாறும்  கேட்டதில் தாய்க்கும் மகனுக்கும் சண்டை ஏற்பட்டதில் மதுபோதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User