பல்லாவரம் எம்.எல்.ஏ மகனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு !

வீட்டு வேலைக்கு சென்ற பட்டியல் சமூக பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Jan 23, 2024 - 15:31
Updated: 3 years ago
0 249
பல்லாவரம் எம்.எல்.ஏ மகனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு !

வீட்டு வேலைக்கு சென்ற பட்டியல் சமூக பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

18 வயதே ஆன பட்டியல் சமூக இளம்பெண் +2 முடித்து மேற்படிப்பிற்கு பணம் இல்லாததால் திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில்  தங்கி வேலை செய்துள்ளார். மேற்படிப்பிற்கு பணம் இல்லாததாலும் வறுமையினால் வீட்டின் சூழ்நிலையினாலும் வீட்டு வேலை செய்ய ஏழு மாதத்திற்கு முன்னர் அனுப்பிவைத்தனர். அந்த பெண்ணை எம்.எல்.ஏ மகன் ஆன ஆண்டோ மதிவாணன் படிவைப்பதாகவும் இடைத்தரகர் மூலம் அனுப்பிவைத்தனர்.

திருவான்மியூர், சவுத் அவென்யூவில் வசித்து திமுக எம்.எல்.ஏ மகன் ஆன ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மெர்லினாவும் சம்பந்தப்பட்ட பெண்ணை வேலை வாங்குவதாக நினைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். சித்திரவதை செய்ததோடு மட்டும் இல்லாமல் உடம்பில் பல இடங்களில் சூடு வைத்து கொடுமையாதியாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண் வலிதாங்காமலும் வீட்டு வேலை அதிகமாக தரப்பட்டதாலும் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில் மதிவாணனும் மெர்லினாவும் அனுப்ப மறுத்துவிட்டனர். மேலும் இது குறித்து வீட்டில் சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம் எனவும் தாங்கள் எம்.எல்.ஏ வீடு உன்னால் ஒன்னும் செய்யமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற நிலையில் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். உடம்பில் சூடு, கன்னத்தில் காயத்தை பார்த்து பெண்ணின் தாய் கதறி அழுதுள்ளார் அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 
கடந்த 7 மாதமாக அந்த பெண்ணிற்கு எந்த வித ஊதியமும் தரப்படவில்லை. காலையில் இருந்து இரவு வரை வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதோடு உணவும் சரியாக தரப்படவில்லை என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அப்பெண் கதறி அழுது பேட்டி கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்கலில் வைரலானது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மதிவாணன் மீதும் மெர்லினா மீதும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து  இருவர் மீதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திமுக எம்.எல் ஏ. மகன்  மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User