Pa Ranjith: “நன்றி கெட்ட பா ரஞ்சித்… தலைவரையா நக்கல் பண்ற..” கொதித்தெழுந்த ரஜினி ரசிகர்கள்!

இயக்குநர் பா ரஞ்சித்தை ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவது ட்ரெண்டாகி வருகிறது.

Apr 13, 2024 - 13:01
0 475
Pa Ranjith: “நன்றி கெட்ட பா ரஞ்சித்… தலைவரையா நக்கல் பண்ற..” கொதித்தெழுந்த ரஜினி ரசிகர்கள்!

சென்னை: அட்டக் கத்தி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பா ரஞ்சித்துக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. இதனையடுத்து கார்த்தியுடன் இணைந்த அவர் மெட்ராஸ் திரைப்படம் மூலம் மாஸ் காட்டினார். கார்த்தி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சம்பவம் செய்தது. இதனால் பா ரஞ்சித் மீதான படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதேநேரம் தரமான ஹிட் படம் கொடுப்பதற்காக காத்திருந்தார் ரஜினிகாந்த்.   

இந்த நிலையில் கபாலி திரைப்படம் மூலம் ரஜினி – பா ரஞ்சித் இணைந்தது. 2016ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியின் கேரக்டர், அவரது மிரட்டலான ஆக்‌ஷன் சீன்ஸ், பஞ்ச் டயலாக் என கபாலி கம்ப்ளீட் தலைவர் மெட்டீரியலாக பட்டையை கிளப்பியது. கபாலிக்கு கிடைத்த வரவேற்பால் மீண்டும் பா ரஞ்சித்துக்கு தொடர்ச்சியாக மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்தார் ரஜினி, அதன்படி 2018ல் இதே கூட்டணியில் காலா திரைப்படம் ரிலீஸானது.    

அடுத்தடுத்து ரஜினி – பா ரஞ்சித் கூட்டணியில் இரண்டு படங்கள் வெளியானதால், கோலிவுட்டே மிரண்டு போய்விட்டது. இந்நிலையில் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதம், தலித் வரலாற்று மாதம் என பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. அதன்படி 4-ஆம் ஆண்டுக்கான வானம் கலைத் திருவிழாவில் தலித் சினிமா பற்றி பா ரஞ்சித்துடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் ரஞ்சித்திடம் கபாலி, காலா இரண்டும் தலித் அரசியல் பேசும் படங்கள்ன்னு தெரியாமலயே ரஜினி நடித்தாரா என கேள்விக் கேட்கப்பட்டது.   

அப்போது பா ரஞ்சித் நக்கலாக சிரித்தது ரஜினி ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த கேள்விக்கு மறுப்புத் தெரிவிக்காமலும் விளக்கம் கொடுக்காமலும் பா ரஞ்சித் கடந்து போனதை ரஜினி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து ‘நன்றி கெட்ட ரஞ்சித்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வரும் ரஜினி ரசிகர்கள், தலைவரின் உயரம் என்னவென்று தெரியாமல் இப்படி நடந்துகொள்ளலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இளம் இயக்குநராக இருந்தாலும் பா ரஞ்சித்தின் திறமையை மதிப்பு வாய்ப்புக் கொடுத்தவர் ரஜினி. அதனை நினைத்துப் பார்க்காமல் இப்படியும் நடந்துகொள்வது தவறு என்றும் விமர்சித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User