பிரதமர் எத்தனை முறை வந்தாலும் கூட்டணியை உடைக்க முடியாது: அடித்துச் சொல்லும் பொன்முடி

Feb 28, 2024 - 15:44
Updated: 2 years ago
0 164
பிரதமர் எத்தனை முறை வந்தாலும் கூட்டணியை உடைக்க முடியாது: அடித்துச் சொல்லும் பொன்முடி

பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுமெனவும், தமிழகத்திற்கு யார் வந்தாலும் திராவிட கட்சியின் கூட்டணியை முறித்து விடமுடியாது என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் வழுதரெட்டியிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திமுக கழக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அரசின் திட்டங்கள் வீடுதோறும் சென்று சேர்ந்ததா என நிர்வாகிகள் கேட்டறிய வேண்டும் என அறிவுறுத்தினார். 

தமிழகத்திற்கு யார் யாரோ வருகிறார்கள், யார் வந்தாலும் திராவிட கட்சியின் கூட்டணியை முறித்து விடமுடியாது என்றும்,  நாடாளுமன்ற தேர்தலை சவாலாக எடுத்து கொண்டு அனைத்து திமுக வேட்பாளர்களையும் வெற்றி செய்ய வேண்டும்  என பொன்முடி வலியுறுத்தியுள்ளார். மேலும்  பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்து தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அவரே மறைமுகமாக தெளிவாக கூறி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த பொன்முடி,  தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாத நிலையில் மோடியை அழைத்து வந்துள்ளதாகவும், தமிழ், தமிழ் என்று கூறிவிட்டு இந்தியை புகுத்த வேண்டுமென மோடி செயல்படுவதாகவும், அவர் எத்தனை முறை தமிழக வந்தாலும் 40 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User