ஓசி சிக்கன் ரைஸ்.. சிக்கன் நூடுல்ஸ்... மிரட்டிய பாமக ஒன்றிய செயலாளர்.. தட்டி தூக்கிய கடலூர் போலீஸ்

கடலூர் புவனகிரி அருகே ஓசி சிக்கன் ரைஸ், ஓசி சிக்கன் நூடுல்ஸ் கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Apr 26, 2024 - 13:29
0 380
ஓசி சிக்கன் ரைஸ்.. சிக்கன் நூடுல்ஸ்... மிரட்டிய பாமக ஒன்றிய செயலாளர்.. தட்டி தூக்கிய கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம் புவனகிரி பங்களா அருகே விருதாச்சலம் சாலையில் ஜாகிர் உசேன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் புவனகிரி பாமக கிழக்கு ஒன்றிய செயலாளரான சுருளிராஜன் என்பவர் அந்த கடைக்குச் சென்று 10 சிக்கன் நூடுல்ஸ், 10 சிக்கன் ரைஸ் பார்சல் கேட்டதாகத் தெரிகிறது.

அவர் கேட்டது போல் பார்சல் கட்டிக்கொடுத்து விட்டு ஹோட்டல் உரிமையாளர் பணத்தைக் கேட்டார். அப்போது நான் யார் தெரியுமா? என்னிடமே பணம் கேட்கிறாயா? எனப் பேசி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

பணம் கேட்டால் கடையை அடித்து உடைத்து விடுவேன் எனவும் அவர் ஆவேசத்துடன் கூறியதாகத் தெரிகிறது.  இதனையடுத்து புவனகிரி காவல்நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் புகார் அளித்தார். இதன் பேரில், சுருளிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். 

ஓசியில் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ் கேட்டு மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது புவனகிரியில் பேசுபொருளாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 3
Angry Angry 0

Comments (0)

User