நெல்லை மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு

நெல்லை மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒருவழியாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருப்பதால், திமுக நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறது.

Mar 25, 2024 - 17:30
0 156
நெல்லை மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 7 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் உட்கட்சி பூசலால் நெல்லை, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்காமல் திணறியது. இந்த விவகாரம் அண்ணா அறிவாலயம் வரை சென்ற நிலையில், எப்படியாவது வேட்பாளர்களை அறிவித்திட வேண்டுமென காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்படும் விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள திமுக, எப்படியாவது மயிலாடுறை மக்களவை தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்து விடுங்கள் எனக் காங்கிரஸ் தலைமையிடம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User