வட சென்னை வாக்காளர்களை இனிப்பாக கவரும் பால் கனகராஜ்... ஜிலுஜிலு பிரசாரம் ...

Apr 11, 2024 - 15:51
0 194
வட சென்னை வாக்காளர்களை இனிப்பாக கவரும் பால் கனகராஜ்... ஜிலுஜிலு பிரசாரம் ...

வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகிறார்கள்.

வடசென்னை மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் பால் கனராஜ் போட்டியிடுகிறார். இன்று(11-04-2024) திருவொற்றியூர் காலடிப்பேட்டை, சாத்தாங்காடு உள்ளிட்ட பகுதிகளில், வீதி வீதியாக திறந்த வாகனத்தில் சென்ற அவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் கிரேன் மூலம் பூ தூவியதோடு, செங்கோலும் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

பின்னர் அப்பகுதியில் உள்ள திரையரங்கத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து, மளிகைக் கடைகள், டீக்கடைகளுக்கு சென்று வாக்கு சேகரித்த பால் கனகராஜ், கடை ஒன்றில் மிஷின் மூலம் கரும்பு ஜூஸ் பிழிந்து சுற்றி நின்றவர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ராஜா கடை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று, பங்குத் தந்தையிடம் ஆதரவு கோரினார். இப்படி, பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்துவரும் பால் கனகராஜிற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 1
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User