எம்ஜிஆர் பெயரில் புதுக்கட்சி, தொன்னந்தோப்பு சின்னம்,கூட்டணி அமைத்து போட்டி: சசிகலா அடுக்கடுக்கான அப்டேட்

தனது புதிய கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா. கட்சி தேர்தல் சின்னத்தையும், கூட்டணி அமைத்து போட்டியிட போவதாகவும் சசிகலா அறிவித்துள்ளார். 

Mar 13, 2026 - 07:13
0 399
எம்ஜிஆர் பெயரில் புதுக்கட்சி, தொன்னந்தோப்பு சின்னம்,கூட்டணி அமைத்து போட்டி: சசிகலா அடுக்கடுக்கான அப்டேட்
தொன்னந்தோப்பு சின்னம்,கூட்டணி அமைத்து போட்டி

சென்னை போயஸ் தோட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பின் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பெயரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடுவோம் என்றும் சசிகலா அறிவித்தார்.

அபுமமுக கட்சியின் சின்னம். இதன் மூலம் நான் தனி மரமாக வரவில்லை, தோப்பாகத்தான் வந்துள்ளேன், நான் என்றைக்குமே மக்களுடன்தான் இருப்பேன் என்பதற்கே இந்த சின்னம் சாட்சி. ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவேன். எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும் என்றும் சசிகலா கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பிப். 24-ஆம் தேதி புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் அறிவித்த நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அவரது கட்சியின் பெயரில் ஜெயலலிதா பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புரட்சித் தலைவர் பெயர் இடம்பெற்றுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User