புதிய உச்சம் : தங்கம் சவரன் ரூ. 880 உயர்வு: வெள்ளி கிலோ 20ஆயிரம் உயர்வு 

தங்கம், வெள்ளி ஆகிய நாளுக்கு நாள் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் சவரனுக்கு ரூ 880 உயர்ந்துள்ளது.அதே போன்று வெள்ளி கிலோ ரூ 20 ஆயிரம் உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Dec 27, 2025 - 04:24
0 237
புதிய உச்சம் : தங்கம் சவரன் ரூ. 880 உயர்வு: வெள்ளி கிலோ 20ஆயிரம் உயர்வு 
Gold sovereign rises by Rs. 880

தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி இன்றும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. 

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254-க்கும், கிலோவுக்கு ரூ.9,000-ம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது. 

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு 880  ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து, கிராம் ரூ 13 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒருசவரன் தங்கம் ரூ 1,04,000 ஆக உயர்ந்துள்ளது.

இதே போன்று வெள்ளியும் இன்று கிலோவிற்கு ரூ 20ஆயிரம் உயர்ந்துள்ளது. கிராம்வெள்ளி ரூ 274 க்கு ஆக உள்ளது. ஒருகிலோ வெள்ளி 2,74,000 மாக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம், வெள்ளி போட்டி போட்டுக் கொண்டு விலை ஏறி வருவதால் நகைப் பிரியர்கள், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User