முதல்வருக்கு உண்டியல் பணத்தைத் தந்து மெய் சிலிர்க்க வைத்த நெல்லை மாணவி

முதலமைச்சர் மாணவியை பாராட்டியதோடு நிதியை பெற்றுக்கொண்டார்.

Dec 22, 2023 - 14:50
Updated: 3 years ago
0 182
முதல்வருக்கு உண்டியல் பணத்தைத் தந்து  மெய் சிலிர்க்க வைத்த நெல்லை மாணவி

தமிழக முதலமைச்சரை மெய் சிலிர்க்க வைக்க வகையில் நெல்லை மாணவி வெள்ள நிவாரண நிதியாக தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

தங்கள் உடமைகளையும் பொருட்களும் இழந்த பொதுமக்கள் பல்வேறு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 2,700 மதிப்புள்ள மொத்தம் 17 பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சிய கார்த்திகேயன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் ராஜகண்ணப்பன்  உடன் இருந்தனர்.

மேலும் நெல்லை டவுண் பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்ரமணியனின்  மகள் சேவிதா பகவதி  இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வருகிறார். இவர் புதிய ஆடை வாங்குவதற்காக தான் வைத்திருந்த சேமிப்பு பணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தார்.அதை வாங்கிய தமிழக முதலமைச்சர் மாணவியை பாராட்டியதோடு நிதியை பெற்றுக்கொண்டார்.மேலும் மாணவிக்கு அன்போடு சாக்லேட் வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User