பெங்களூரு குண்டுவெடிப்பு - தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் NIA சோதனை...

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Mar 05, 2024 - 09:41
0 185
பெங்களூரு குண்டுவெடிப்பு - தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் NIA சோதனை...

கடந்த 1ம் தேதி பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடித்ததில் சுமார் 9க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் மர்மப்பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு விசாரணையில் அது குண்டு வெடிப்புதான் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதிப்படுத்தினார். வெடிகுண்டை பையில் வைத்து பேருந்தில் எடுத்துச்சென்று, ஹோட்டலில் ரவா இட்லி ஆர்டர் செய்தபின் பையை அங்கேயே ஒருவர் விட்டுச் சென்றதாகவும் அதில் இருந்து குண்டுவெடித்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து சந்தேக நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை மண்ணடி அருகே முத்தையால் பேட்டை, பிடாரியார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீடு மற்றும் ராமநாதபுரத்தில் சுமார் 4 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User