பைக்கில் போன மாஜி கவுன்சிலர்.. காரில் வந்து சுத்து போட்ட மர்ம நபர்கள்.. அதிர்ந்த அரக்கோணம்

Apr 24, 2024 - 18:18
0 211
பைக்கில் போன மாஜி கவுன்சிலர்.. காரில் வந்து சுத்து போட்ட மர்ம நபர்கள்.. அதிர்ந்த அரக்கோணம்

அரக்கோணம் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய முன்னாள் அதிமுக கவுன்சிலர் ரமேஷ், இன்று (ஏப்ரல் 24) பொய்ப்பாக்கம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மகும்பல், ரமேஷை வழிமறித்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியதாக கூறப்படுகிறது. 

இதில், படுகாயம் அடைந்த ரமேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து கிராமிய காவல்துறை வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User