முட்டைக்காடு அருகே ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி மர்ம மரணம்

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Jan 09, 2024 - 14:59
Updated: 3 years ago
0 156
முட்டைக்காடு அருகே ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி மர்ம மரணம்

முட்டைக்காடு அருகே ரப்பர் பால் வெட்டும் பணியின் போது தொழிலாளர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,முட்டைக்காடு அருகே குமாரபுரம் அருகே உள்ள பால்ராஜ் (47) ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி, மனைவி மகேஸ்வரி (43)இவர்களுக்கு  இரண்டு பிள்ளைகள் உண்டு இருவரும் படித்து வருகின்றனர். இன்று அதிகாலை பால்ராஜ் அருகில் உள்ள மலைக்கு ரப்பர் பால் எடுக்க சென்றார்.அப்போது விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளதாக தெரிகிறது.

வேதனை பொறுக்க முடியாமல் சத்தம் போட்டபடி சிறுதூரம் ஓடி மயங்கி கீழே விழுந்தார்.இதைப் பார்த்த சக தொழிலாளிகள் வீட்டுக்கு தகவல் கொடுத்து விட்டு அவரை தூக்கி சிகிச்சைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து உடலை உடல் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User