மறுக்கப்பட்ட நிவாரணத்தை தரக் கோரி மரத்திலேறி போராட்டம்

தாயாரின் பிரேத பரிசோதனை புயலுக்கு மறுநாள் செய்யப்பட்டுள்ளதாக கூறி நிவாரணம் அளிக்க மறுத்துவிட்டனர்.

Nov 17, 2023 - 11:16
Updated: 3 years ago
0 2.3
மறுக்கப்பட்ட நிவாரணத்தை தரக் கோரி மரத்திலேறி போராட்டம்

கஜா புயலில் இறந்த தாய்க்கு நிவாரணம் கொடுக்காததை கண்டித்து பனை மரத்தில் ஏறி மகன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (48) கூலித் தொழிலாளி 6 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் பழுதடைந்த கூரை வீட்டில் வசித்து வருகிறார்.இவரது தாயார் அம்மாளு அம்மாள் கடந்த 2018 ஆண்டு வீசிய  கஜா புயலில்  உயிரிழந்தார்.

இறந்த தாயாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு 5 ஆண்டுகளாக வருவாய்த்துறையினரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருந்தார். தாயாரின் பிரேத பரிசோதனை புயலுக்கு மறுநாள் செய்யப்பட்டுள்ளதாக கூறி நிவாரணம் அளிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் பனைமரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக வருவாய்த்துறையினறுக்கு கடிதம் அனுப்பிவிட்டு, நேற்று காலை 9 மணி அளவில்  தோப்புத்துறை ரயில்வே நிலையம் அருகே  80 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை வேண்டும் என முழக்கமிட்டவாறு பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்.

தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்புத் துறையினர் அவரை பனை மரத்திலிருந்து கீழே இறக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நிவாரணம் கொடுத்தால் மட்டுமே பனைமரத்தை விட்டு கீழே இறங்குவேன் என ராமச்சந்திரன் அடம் பிடித்தார்.பின்னர் வேதாரண்யம் வட்டாச்சியர் ஜெயசீலன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து  மூன்று மணி நேரத்திற்கு பிறகு ராமச்சந்திரன் பத்திரமாக கீழ இறங்கி வந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User