Mookuthi Amman 2: நயன் இடத்தில் த்ரிஷா... மூக்குத்தி அம்மன் 2 அப்டேட் கொடுத்த RJ பாலாஜி..?

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 30, 2024 - 17:10
0 411
Mookuthi Amman 2: நயன் இடத்தில் த்ரிஷா... மூக்குத்தி அம்மன் 2 அப்டேட் கொடுத்த RJ பாலாஜி..?

சென்னை: ரேடியோ ஜாக்கியாக பிரபலமான ஆர்ஜே பாலாஜி, பின்னர் சினிமாவிலும் காமெடியனாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்த ஆர்ஜே பாலாஜி, NJ சரவணனுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். நயன்தாரா அம்மன் கேரக்டரிலும், ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி ஆகியோர் லீட் ரோலிலும் நடித்திருந்தனர். 2020 நவம்பர் 14ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது மூக்குத்தி அம்மன். கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் யார்?
அம்மன் கேரக்டரில் நயன் ஸ்கோர் செய்ய, மேக்கிங், வசனம் ஆகியவற்றில் ஆர்ஜே பாலாஜி இயக்குநராக சிக்ஸர் அடித்தார். காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தில் நயன் கேரக்டருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருந்தார் ஆர்ஜே பாலாஜி. இதனால் நயன்தாரா கேரியரில் மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) தரமான படமாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தில் நயனுக்குப் பதிலாக த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.   

நயன் இல்லனா த்ரிஷா
பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பின்னர் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. லியோவில் விஜய் ஜோடியாக நடித்த த்ரிஷா, அடுத்து அஜித்துடன் விடாமுயற்சியில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் த்ரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் நயன் இல்லனா த்ரிஷா என மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) காம்போவை ஆர்ஜே பாலாஜி மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் 2 அபிஸியல் அப்டேட்
இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகம் (Mookuthi Amman 2) இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் படம் மூக்குத்தி அம்மன் போல ஃபேண்டஸியாக இருக்கும் எனவும், டைட்டிலை மாற்றவும் ஆர்ஜே பாலாஜி முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை பலவிதமான கேரக்டர்களில் நடித்துள்ள த்ரிஷா, இந்தமுறை அம்மன் வேடத்தில் ரசிகர்களை பக்தி பரவசப்படுத்துவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User