Manjummel Boys OTT: ஓடிடியில் வெளியாகும் மஞ்சும்மல் பாய்ஸ்… எப்போ எந்த OTT Platform-ன்னு தெரியுமா..?

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது.

Mar 26, 2024 - 15:05
0 673
Manjummel Boys OTT: ஓடிடியில் வெளியாகும் மஞ்சும்மல் பாய்ஸ்… எப்போ எந்த OTT Platform-ன்னு தெரியுமா..?

சென்னை: செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார். பிப்.22ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். முக்கியமாக கேரளாவை விட தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு தரமான வரவேற்பு கிடைத்தது. இதனால் இப்போது வரையும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு தமிழகத்தில் அதிகமான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு டூர் வரும் இளைஞர்களில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்ள, அவரது நண்பர்கள் எப்படி காப்பாற்றுக்கின்றனர் என்பது தான் இப்படத்தின் கதை. கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவான மஞ்சும்மல் பாய்ஸ், இந்தளவிற்கு ஹிட்டாகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கெல்லாம் காரணமாக அமைந்தது குணா படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடல் தான்.  

இப்பாடல் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்றதால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. 20 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ், தமிழ்நாட்டில் மட்டுமே 50 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி தகவல்கள் வெளியாகின.  

அதன்படி, இந்தப் படம் ஏப்ரல் 5ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இது தவறான தகவல் எனவும், மே மாதம் தான் மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடியில் வரும் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எதிர்பார்த்திருந்த ஓடிடி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User