மத்திய பிரதேச ராஜ்ய சபா தேர்தல்: வேட்புமனு நிராகரிப்பு, காங்கிரசு போராட்டம்

மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு  காங்கிரசு சார்பில் போட்டியிட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைக் கண்டித்து அக்கட்சி சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது.

Jun 12, 2026 - 12:21
0 204
மத்திய பிரதேச ராஜ்ய சபா தேர்தல்: வேட்புமனு நிராகரிப்பு, காங்கிரசு போராட்டம்

காங்​கிரஸ் சார்​பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்​கல் செய்​திருந்​தார். ஆனால், ஹைத​ரா​பாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்​புமனு​வில் குறிப்​பிடப்​ப​டாத​தால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

இதனை கண்டித்து காங்கிரஸ் தலைமையகம் உள்ள அக்பர் சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற அவர்களை தடுப்புகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை அகற்ற காங்கிரஸ் கட்சியினர் முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.  

முன்னதாக காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலைவர்​கள், தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​களை சந்தித்தனர். அப்​போது, ‘மீ​னாட்சி நடராஜன் மீது நீதிமன்றம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத நிலையில் அவரது மனு நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. அவருடைய மனுவை ஏற்​கு​மாறு தேர்​தல் அதி​காரிக்கு உத்​தர​விட வேண்​டும்​’ என கோரிக்​கை மனு அளித்​தது குறிப்பிடத்தக்கது​.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User