வாளில் கேக் வெட்டிய எம்எல்ஏ, பெண்ணுக்கு பாலியல்: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே அட்ராசிட்டி ஆரம்பித்த தவெக

வாளலால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைவதற்கு முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் அட்ராசிட்டி தொடங்கி விட்டனர். 

May 06, 2026 - 06:36
0 536
வாளில் கேக் வெட்டிய எம்எல்ஏ, பெண்ணுக்கு பாலியல்: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே அட்ராசிட்டி ஆரம்பித்த தவெக
ஆட்சி அமைவதற்கு முன்பாகவே அட்ராசிட்டி ஆரம்பித்த தவெக

10 சிறுமிக்கு பாலியல் சீண்டல் 

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள 10 வயது சிறுமி  தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார்.  ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அந்த சிறுமி  அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற பாம்பு தினேஷ் என்பவர் தனது வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் எடுத்ததாக கூறப்படுகிறது. 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற கடந்த 3 ஆம் தேதி  ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர் தவெக பிரமுகர் என்று கூறப்படுகிறது.

வாளில் கேக் வெட்டிய எம்எல்ஏ 

வீரவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சென்னை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவின் பிறந்த நாளை அந்த கட்சியினர் சூரிய நாராயணன் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். 

அப்பொழுது தனது பிறந்தநாளில்  பிளாஸ்டிக் மற்றும் மரத்தினால் ஆன கத்தியை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவிடம் அவரது ஆதரவாளர் வழங்கினர். ஆனால் அதை வைத்துவிட்டு வீரவாளை எடுத்து கையை உயர்த்தி காட்டி அதை வைத்து கேக் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரில் அட்ராசிட்டி 

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்த காரில் அட்ராசிட்டியில் தவெகவினர் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொட்டும் மழையில் தவெக கொடி பிடித்து கொண்டு கோஷம் போட்டு ஸ்டாண்ட் செய்து அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதே போன்று தவெக வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் சாலை ஒரத்தில் ஆடு பலியிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தவெக துண்டு அணிந்த அவர்கள் ஆடு பலியிடுவதும், பின்னர் ஆட்டின் தலை, உடலை சாலையின் ஒரமாக எடுத்து போடுவது, அதனை பார்த்து மக்கள் அச்சப்படுவது போன்ற வீடியோ இடம் பெற்றுள்ளது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User