பாமக, அமமுக போட்டியிடும் தொகுதி பட்டியல்: யாரெல்லாம் வேட்பாளர்கள்?

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிடும் 18, அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. 

Mar 25, 2026 - 10:12
0 711
பாமக, அமமுக போட்டியிடும் தொகுதி பட்டியல்: யாரெல்லாம் வேட்பாளர்கள்?
List of constituencies where PMK and AMMK will contest

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான பட்டியலை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் செஞ்சி தொகுதியில் கணேஷ்குமார். அம்பத்தூரில் சேகர், பென்னாகரத்தில் செளமியா அன்புமணி உள்ளிட்டோர் போட்டியிடுவார் என தெரிகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடுவதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

இதே போன்று அமமுகவிற்கு 11 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதில் பெரியகுளத்தில் டாக்டர் கதிர்காமு, மன்னார்குடியில் காமராஜ், திருவையாறில் வேலுகார்த்திகேயன், காரைக்குடியில் தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் பார்த்திபன், ஒட்டப்பிடாரம் சுந்தர்ராஜ், திருச்சி மேற்கு தொட்டியும் ராஜசேகர், சைதாப்பேட்டை செந்தமிழன், பூந்தமல்லி ஏழுமலை, மடத்துக்குளம் சண்முகநாதன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User