சிவனுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை ரூ.35,000க்கு ஏலம்...

ஈரோட்டில் சிவனுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சையை பக்தர் ஒருவர், ரூ.35,000-க்கு ஏலம் எடுத்தார்.

Mar 12, 2024 - 06:55
0 190
சிவனுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை ரூ.35,000க்கு ஏலம்...

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பூஜையில், சிவனுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு எலுமிச்சையை ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபர் ரூ.35,000-க்கு ஏலம் எடுத்தார். 

தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு எலுமிச்சை வழங்கப்பட்டது. பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சையை ஏலத்தில் எடுப்பவருக்கு செல்வமும், ஆரோக்கியமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User