Legend: டெரர் லுக்கில் லெஜெண்ட்... கருடன் இயக்குநருடன் கூட்டணி... வேற லெவல் அப்டேட்!

தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரவணன், டெரரான லுக்கில் தனது அடுத்த மூவி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

Jun 24, 2024 - 12:06
0 260
Legend: டெரர் லுக்கில் லெஜெண்ட்... கருடன் இயக்குநருடன் கூட்டணி... வேற லெவல் அப்டேட்!

சென்னை: தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரவணன். சென்னை உட்பட பல பகுதிகளில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான இவர், ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்போதே ஹன்சிகா உட்பட பல நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்த சரவணன், தி லெஜெண்ட் படத்தில் ஆக்ஷனிலும் மாஸ் காட்டினார். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த தி லெஜெண்ட் திரைப்படம் 2022ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸானது. அதிக எதிர்பார்ப்புடன் பான் இந்தியா படமாக ரிலீஸான தி லெஜெண்ட், விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் தடுமாறவே செய்தது. 

ஆனாலும் இதைபற்றியெல்லாம் கவலைப்படாத லெஜெண்ட் தனது அடுத்தப் படத்திற்கு இயக்குநர் தேடி வந்தார். அதேபோல், விஜய்யின் லியோ படத்தில் லெஜெண்ட் சரவணன் கேமியோவாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அது வதந்தி என தெரியவந்தாலும், லெஜெண்ட் மட்டும் அடிக்கடி தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டே வந்தார். இந்நிலையில், தற்போது தனது புதிய படம் குறித்து தாறுமாறாக அப்டேட் கொடுத்துள்ளார் லெஜெண்ட் சரவணன். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்களையும் ஷேர் செய்துள்ளார்.

அதன்படி, லெஜெண்ட் சரவணின் அடுத்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் போன்ற படங்களை இயக்கியுள்ள துரை செந்தில்குமார், லெஜெண்ட் சரவணனுடன் கூட்டணி வைத்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. சூரி லீடிங் ரோலிலும், அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களிலும் நடித்திருந்தனர். விடுதலைக்குப் பின்னர் சூரிக்கு தரமான கம்பேக் கொடுக்கும் படமாக கருடன் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் கருடன் மாஸ் காட்டியது.

அப்போது தனது அடுத்தப் படத்தின் ஹீரோ லெஜெண்ட் சரவணா தான் எனக் கூறியிருந்தார் துரை செந்தில்குமார். அது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும், இப்போது லெஜெண்ட் சரவணன் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், சிவப்பு நிற பின்னணியில் கையில் துப்பாக்கியுடன் கெத்து காட்டுகிறார் லெஜெண்ட். மேலும் இயக்குநர் துரை செந்தில்குமாருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ள அவர், லெஜெண்ட் நெக்ஸ்ட்... New Game Started என கேப்ஷன் கொடுத்துள்ளார். கருடன் இயக்குநர் துரை செந்தில்குமாருடன் இணைந்துள்ளதால், லெஜெண்ட் சரவணன் கண்டிப்பாக கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User