Lal Salaam: லால் சலாம் தோல்விக்கு காரணம் ரஜினி தானா..? உண்மையை ஓபனாக சொன்ன ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், அதன் தோல்வி குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்துள்ளார்.

Mar 07, 2024 - 11:14
0 348
Lal Salaam: லால் சலாம் தோல்விக்கு காரணம் ரஜினி தானா..? உண்மையை ஓபனாக சொன்ன ஐஸ்வர்யா!

ஜெயிலரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் லால் சலாம். தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக கேமியோ ரோலில் நடித்திருந்தார் தலைவர். பத்து நிமிஷம் கேமியோ ரோல் தான, சும்மா பந்தாவாக வந்து மாஸ் காட்டிவிட்டுப் போகலாம் என நினைத்தாரா என்னவோ… ஆனா! இப்ப ஏன்டா லால் சலாம் படத்தில் நடித்தோம் என நொந்து நூடுல்ஸ் ஆகும் நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் மட்டுமா! லால் சலாம் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினியும்  “Why Blood.. Same Blood” என்ற துதியை தான் பாடி வருகிறார்.

ரஜினி நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸான ஜெயிலர் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனால் அப்பா கேமியோவாக நடித்தல் அட்லீஸ்ட் ஒரு நூறு கோடியாவது தட்டித் தூக்கிவிடலாம் என சொப்பனத்தில் மிதந்து வந்தார். ரஜினியின் கேமியோ பெர்ஃபாமன்ஸ், ஏஆர் ரஹ்மானின் இசை, லைகா புரொடக்‌ஷன் என எதுவெல்லாம் லால் சலாம் படத்தின் ப்ளஸ்ஸாக பார்க்கப்பட்டதோ கடைசியில் அவையனைத்தும் தான் இந்தப் படத்தை தியேட்டரில் இருந்து ஓட வைத்தது. இந்த துயரத்திலும் ஒரேயொரு ஆறுதல் லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகாமல் போனது தான். 

லால் சலாம் தோல்வி படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே தெரிந்துவிட்டது. இப்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது லால் சலாம். இந்த நிலையில் தான் லால் சலாம் தோல்வி பற்றி மனம் திறந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் அவங்க கொடுத்த ஒரு பேட்டியில் லால் சலாம் படத்தில் ரஜினி நடிச்சது பற்றியும் மனம் திறந்திருக்காங்க. அதுல ரஜினியோட கேமியோ ரோல் பத்து நிமிடங்கள் மட்டுமே வர்ற மாதிரி தான் முதலில் ஸ்க்ரிப்ட் எழுதியிருந்தேன். 

ஆனால், ஷூட் போனதும் லால் சலாம் படத்தோட மொத்த கதையும் தலைவரோட மொய்தீன் பாய் கேரக்டர் மேல ட்ராவல் பண்ற மாதிரி அகிடுச்சு. அதனால வேற வழியே இல்லாம இரண்டாம் பாதி முழுக்க அப்பாவோட கேரக்டர் வர்ற மாதிரி ஷூட் பண்ணோம். அப்படி இருந்தும் முதல் பாதில ரசிகர்கள் ஏமாந்துட கூடாதுன்னு ரிலீஸுகு 2 நாள் முன்னாடி திரும்பவும் எடிட் பண்ண வேண்டியதா போச்சு. அப்படித்தான் லால் சலாம் முதல் பாதிலயும் தலைவரோட கேரக்டர் 10 நிமிஷம் வர்ற மாதிரி கொண்டு வந்தோம்.

இதெல்லாம் தான் லால் சலாம் படத்துக்கு நெகட்டிவா விமர்சனம் வர்றதுக்கு காரணம்ன்னு புரியுது. சூப்பர் ஸ்டார வச்சு ஒரு படம் பண்ணா அவரோட கேரக்டருக்கு தான் அங்க முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன் என ஐஸ்வர்யா பேசியது வைரலாகி வருகிறது. ஆகமொத்தம் ஐஸ்வர்யாவும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ‘உன்னால நான் கெட்டேன்… என்னால நீ கெட்ட..” என்ற நிலைக்கு ஆளாகிட்டாங்களே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User