பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே .... உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய பாஜக எம்பிக்கள்....  

பிரதமர் மோடியை அவமதிக்கும் நோக்கில் கருத்து தெரிவித்ததாக மாநிலங்களவை தலைவர், காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே மீது பாஜகவின் எம்பிக்கள் ஆறு பேர் ராஜ்ய சபாவில் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

Jun 18, 2026 - 05:26
0 225
பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே .... உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய பாஜக எம்பிக்கள்....   
Kharge BJP Clash

தமிழக சட்டமன்றத்  தேர்தல் இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது  உரையாற்றிய காங்கிரஸ் எம்பியுமான மல்லிகார்ஜுனா கார்கே பாஜகவின் தலைவர் பிரதமர் மோடியை அவமதிக்கும் நோக்கில்  கருத்துகளை தெரிவித்ததாக பாஜகவின் எம்பிக்களான பிரிஜ்  லால், மித்லேஷ் குமார், சுமித்ரா பால்மிக், ஷிவேஷ் குமார், சிகந்தர் குமார், நாகேந்திர ரே ஆகியோர் ஒன்றிணைந்து உரிமை மீறல் நோட்டீஸை அளித்துள்ளனர்.

பிரதமர் மோடி குறித்து,கார்கே  பயங்கரவாதி என்றும் அவர் சமத்துவம் மற்றும் நீதியை நம்புவதில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.இவரின் இந்த கருத்து அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியது.இந்த சர்ச்சை கருத்து  குறித்த விளக்கம் அளித்த கார்கே தன்னை தனிப்பட்ட முறையில் அப்படி அழைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் மக்களையும் மத்திய அமைப்புகள் மூலம் மோடி அச்சுறுத்துகிறார் என்பதையே அவ்வாறு குறிப்பிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இந்த நோட்டீஸை மாநிலங்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தும் விதி எண் 189 ன் கீழ் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆராய்ந்து, விசாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உரிமை மீறல் குழுவுக்கு அந்த அவையின் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்துள்ளார். மேலும் உரிமை மீறல் குழுவின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்  இதில் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கார்கேவின் கருத்துகள் நாடாளுமன்ற விதிகளை மீறியதா என்று ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று ராஜ்யசபா பி.சி மோடி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User