மாணவிக்கு பாலியல் தொல்லை-உடற்பயிற்சி ஆசிரியர் கைது

பெண்களிடம் வீடியோ காலில் பேசும்போது அவர்களை ஆடைகளை கழற்றக் கூறி பின்பு வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

Jan 08, 2024 - 17:26
Updated: 3 years ago
0 279
மாணவிக்கு பாலியல் தொல்லை-உடற்பயிற்சி ஆசிரியர் கைது

கன்னியாகுமரி அருகே 11 ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், இடலாக்குடி வட்டவிளை காமராஜ் தெருவை சேர்ந்தவர் சுந்தர்சிங் ( 32). இவர் மயிலாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

மேலும் பள்ளி செல்ல வசதியாக கன்னியாகுமரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். அதே பகுதியில் இவர் பணிபுரியும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் கன்னியாகுமரி வீட்டு அருகே வசித்து வருகிறார். இதில் 11ம் வகுப்பு மாணவிக்கும் சுந்தர்சிங்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

மாணவியின் பெற்றோர்களும் மாணவிக்கு கல்வி சம்பந்தமாக ஆசிரியர் உதவி செய்வதாக நினைத்து வந்துள்ளனர். மேலும் மாணவிக்கு பல்வேறு உதவிகள் நோட், புக், செல்போன்  வாங்கி கொடுத்து வந்துள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இந்நிலையில்  மாணவி அழகப்பபுரத்தில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றுள்ளார்.அப்போது சுந்தர் சிங் தனது காரில் அங்கு வந்துள்ளார். மாணவியை காருக்குள் அழைத்து பேசிக் கொண்டிருந்த அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியிடம் பலமுறை உடலுறவு கொண்டதாக தெரிகிறது. 

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.மாணவியின் தாயார் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தார். அத்ன்பேரில் போலீசார் சுந்தர்சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுந்தர் சிங்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சுந்தர் சிங் கடந்த பத்து மாதங்களுக்கு முன்புதான் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிக்கு சேர்ந்துள்ளார். 

சுந்தர் சிங்கிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

செல்போனில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளது.ஆபாச வீடியோக்களும் இருந்தது தெரிய வந்தது.பெண்களிடம் வீடியோ காலில் பேசும்போது அவர்களை ஆடைகளை கழற்றக் கூறி பின்பு வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் வீடியோக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

புகைப்படங்களில் உள்ள பெண்கள் யார் என்பது குறித்த விவரங்களை சுந்தர் சிங்கிடம் போலீசார் கேட்டறிந்தனர்.மேலும் வீடியோவில் உள்ள பெண் யார் என்பது குறித்த விவரங்களை போலீசார் கேட்டனர்.அப்போது அவர் அந்த பெண் அஞ்சு கிராமம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை என்று கூறினார்.இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து சுந்தர் சிங்கிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User