இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பட்டதாரி கைது

டிவிட்டரில் வெளியிடப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் நீக்கப்பட்டது.

Jan 08, 2024 - 20:28
0 186
இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பட்டதாரி கைது

நாகர்கோவிலில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட எம்.பி.ஏ. பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் சுஜெய் (வயது 33), எம்.பி.ஏ. பட்டதாரியான. இவர் சுமார் 30 வயதான இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். 

இளம்பெண்ணும் சுஜெய்யை காதலித்துள்ளார். ஆனால் காதலர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண், தன் காதலனை கழற்றிவிட்டு விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜெய், இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் அதை இளம்பெண் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.ஆனால் சுஜெய் தான் கூறியது போலவே இளம்பெண்ணின் ஆபாசு புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து குமாி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார்.இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த சைபர் கிரைமுக்கு, போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜெய்யை கைது செய்தனர். மேலும் டிவிட்டரில் வெளியிடப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் நீக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User