Kalki 2898AD: பைரவா அவதாரம் எடுக்கும் பிரபாஸ்… மிரட்டலாக வெளியானது கல்கி 2898AD போஸ்டர்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இருந்து பிரபாஸின் கேரக்டர் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Mar 08, 2024 - 17:55
0 217
Kalki 2898AD: பைரவா அவதாரம் எடுக்கும் பிரபாஸ்… மிரட்டலாக வெளியானது கல்கி 2898AD போஸ்டர்!

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு எதிர்பார்த்தளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸுக்கு ஓரளவு கை கொடுத்தது. இதனையடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898 AD.  

நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD படத்தில் கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கல்கி மே 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது பிரபாஸின் கேரக்டர் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் பைரவா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் பிரபாஸ். மஹா சிவராத்திரியை முன்னிட்டு வெளியான பிரபாஸின் பைரவா கேரக்டர் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User