பாஜகவுக்கு கே.பி.முனுசாமி விட்ட சவால்.. என்ன தெரியுமா?

பாஜகவுக்கு தைரியம் இருந்தால், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் மத்திய அமைச்சர்களை களம் காண வைப்பார்களா? என்று கே.பி.முனுசாமி சவால் விடுத்திருக்கிறார்.

Mar 01, 2024 - 07:57
Updated: 2 years ago
0 190
பாஜகவுக்கு கே.பி.முனுசாமி விட்ட சவால்.. என்ன தெரியுமா?

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்த நிலையில், இரு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை மோதல் தற்போது முற்றி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கருத்து மோதல் இருந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ரவுண்டானாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 76-வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசினார். 

அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தைரியம் இருந்தால், மத்திய அமைச்சர்களை தமிழ்நாட்டில் நிற்க வைக்கட்டும் என்றார். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் எந்த தொகுதியில் நிறுத்தனாலும், தமிழ்நாட்டு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User