Janhvi Kapoor: திருப்பதி கோயிலில் ஜான்வி கபூர்… செல்ஃபிக்காக முண்டியடித்த ரசிக பக்தர்கள்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திருப்பதியில் உள்ள பெருமாள் கோயில் சிறப்பு தரிசனம் செய்தார் ஜான்வி கபூர்.

Mar 06, 2024 - 15:05
0 232
Janhvi Kapoor: திருப்பதி கோயிலில் ஜான்வி கபூர்… செல்ஃபிக்காக முண்டியடித்த ரசிக பக்தர்கள்

பாலிவுட் நாயகியும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து திருப்பதி பெருமாள் கோயிலில் தரிசனத்துக்காகச் சென்ற ஜான்வி கபூர், அன்ன நடை நடந்து ரசிக பக்தர்களுக்கு வைப் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.   

1980களில் கோலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் ஃபேவரைட் நாயகியாக வலம் வந்தவர். இவரது மகள் ஜான்வி கபூரும் முன்னணி நாயகியாகும் முயற்சியில் தீவிரமாக காணப்படுகிறார். தெலுங்கில் உருவாகும் தேவாரா படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடித்து வரும் ஜான்வி, டோலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஜான்வி, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் பிரசாதங்களை பெற்றுக்கொண்ட ஜான்வி, கோயில் வளாகத்தில் அன்ன நடை நடந்து பக்த ரசிகர்களை கிறங்கடித்தார். 

சிவப்பு நிற தாவணியில் ஒய்யாரமாக நடந்து வந்த ஜான்வியை பார்த்து வைப் ஆன ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர். ஆனாலும், அவர்களை தனது புன்னகையால் அசால்டாக டீல் செய்த ஜான்வி, காரில் ஏறியதும் யாரையும் கண்டுகொள்ளாமல் சென்றார். ரசிகர்களோ ‘ஏமிரா இது..?’ என ஏமாற்றத்தில் துவண்டு விட்டனர். ஜான்வி வந்து செல்லும் வரை திருப்பதி பெருமாள் கோயில் வளாகமே பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User