ஜார்க்கண்டில் பயங்கரம்... ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு?

Feb 28, 2024 - 21:46
0 233
ஜார்க்கண்டில் பயங்கரம்... ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு?

ஜார்க்கண்டில் ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தரா மாவட்டத்தில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User