”சிங்கிளா சுத்த நான் சிம்பு இல்ல..” வெளியானது சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு ட்ரெய்லர்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Apr 26, 2024 - 17:54
0 414
”சிங்கிளா சுத்த நான் சிம்பு இல்ல..” வெளியானது சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு ட்ரெய்லர்

சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் என்ட்ரியான சந்தானம், ஆரம்பத்தில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார். திடீரென ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம், இனி நாயகனாக மட்டுமே நடிப்பேன் என முடிவு செய்தார். அதன்படி கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் ஹீரோவானவர், அடுத்தடுத்து மினிமம் பட்ஜெட் மூவிகளில் நடித்து வருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் பாதிக்கும் மேல் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இருப்பினும் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு ஓடிக் கொண்டிருக்கிறார்.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களுடன் வெற்றிப் பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது இங்க நான் தான் கிங்கு படத்திலும் ஹீரோவாக நடித்தார் சந்தானம். ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் ப்ரியாலயா, விவேக் பிரசன்னா, தம்பி ராமையா, மாறன், பால சரவணன், மறைந்த நடிகர் சேசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், டி இமான் இசையமைத்துள்ளார். 

இங்க நான் தான் கிங்கு மே 10ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ்ஸான சந்தானத்தின் திருமண வாழ்வில் வரும் பிரச்சினைகளும் காமெடி கலாட்டாகளும் தான் இந்தப் படத்தின் கதை. “நடிகர் சங்கத்த கட்டி முடிச்சிட்டுத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்பிடிக்க விஷாலும் இல்ல, எப்பவும் சிங்கிளா சுத்திட்டு இருக்க சிம்புவும் இல்ல..” என ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே பஞ்ச் கொடுத்தபடி மாஸ் காட்டுகிறார் சந்தானம்.

தொடர்ந்து தம்பி ராமையா, பால சரவணன், மாறன், முனிஷ்காந்த், கூல் சுரேஷ், சேசு கூட்டணியில் சந்தானம் அடிக்கும் கமெடி அலப்பறைகள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் சந்தானத்தின் வழக்கமான கவுன்டர் அட்டாக் காமெடியும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. சந்தானம், மாறன் காம்போ இந்தப் படத்திலும் காமெடி ட்ரீட் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் மே 10ம் தேதி வெளியாகவுள்ள இங்க நான் தான் கிங்கு சந்தானத்துக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User