Indian 2: இந்தியன் 2 சம்பவத்தில் ரஜினி… நண்பன் கமலுக்காக OK சொன்ன சூப்பர் ஸ்டார்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 29, 2024 - 12:12
0 361
Indian 2: இந்தியன் 2 சம்பவத்தில் ரஜினி… நண்பன் கமலுக்காக OK சொன்ன சூப்பர் ஸ்டார்!

சென்னை: சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் 2, ஒருவழியாக ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கமல் – ஷங்கர் கூட்டணி முதன்முறையாக இணைந்த இந்தியன் திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாகியுள்ளது. கமல் - ஷங்கர் கூட்டணியில் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், மறைந்த விவேக், மனோபாலா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.    

பட்ஜெட் பிரச்சினை, கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்பில் கிரேன் விபத்து என அடுத்தடுத்து பல தடைகளை சந்தித்தது இந்தியன் 2. இதனால் ஒருகட்டத்தில் படமே ட்ராப் ஆகும் நிலைக்குச் சென்றது. ஆனால், விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்தியன் 2ம் பாகத்தை மீண்டும் தொடங்கியது கமல் – ஷங்கர் கூட்டணி. அதேநேரம் இரண்டாம் பாகத்திற்காக ஷூட் செய்யப்பட்டதில் கூடுதலாக ஃபுட்டேஜ் இருந்ததால், தற்போது இந்தியன் 3-ம் பாகம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.    

இந்நிலையில் இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. ரிலீஸ் தேதியை மட்டும் இன்னும் கன்ஃபார்ம் செய்யாத படக்குழு, ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு, ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள், மே முதல் வாரத்தில் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக மே 2வது வாரம் இந்தியன் 2 ஆடியோ லான்ச் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.  

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டோலிவுட் ஹீரோ ராம் சரண் இருவரும் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியும் கமலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதன்பின்னர் ரஜினி, கமல் இருவரும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கமலுக்காக ரஜினி பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ஷங்கரின் கேம் சேஞ்சர் ஹீரோவான ராம் சரண், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.  

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இந்தியன் 2 மட்டுமின்றி கமல் வில்லனாக நடித்துள்ள கல்கி திரைப்படமும் வெளியாகிறது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் லீடிங் ரோலிலும் நடித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User