"ஏய் போலீஸ், நீ வேணா சண்டைக்கு வா" பாய்ந்து சுருண்ட "அழுகுனி" குமார்..

சென்னை மதுரவாயல் அருகே கஞ்சா போதையில் உடலை பிளேடால் கீறிக்கொண்டு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் காவல்நிலையம் அனுப்பி வைத்தனர்.

Mar 31, 2024 - 08:47
0 285
"ஏய் போலீஸ், நீ வேணா சண்டைக்கு வா" பாய்ந்து சுருண்ட "அழுகுனி" குமார்..

சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி செல்லக்கூடிய பிரதான சாலையில், கஞ்சா போதையில் சட்டையின்றி ஒரு இளைஞர் பொதுமக்களை தொல்லை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடம் சென்றபோது, சாலையில் இருந்தோரை விட பரிதாபமான நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர் என்றுதான் கூற வேண்டும். இப்படியாக போலீசாரை கேட்க முடியாத வார்த்தைகளில் எல்லாம் திட்டித் தீர்த்த இளைஞர், தன்னை கண்டித்ததால் பிளேடால் தனது உடலை தானே கீறிக்கொண்டு, என்னால் என்ன செய்ய முடியும் பார்க்கிறாயா என அலப்பறையைக் கூட்டினார். விபரீதம் ஆகி விடுமோ என போலீசார் பொறுமை காக்க, அவ்வழியே சென்றவர்கள் காவல்துறையினருக்காக இளைஞரை தடுத்தபோது, அவர்களையும் மோசமான வார்த்தைகளால் கடித்து வைத்தார் இளைஞர்.

ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள், போலீசார் கண்முன்னே தர்மஅடி கொடுத்து காவல்நிலையம் செல்ல வாகனத்தில் ஏற்றிவிட்டனர். வலி தாங்க முடியாமல் அழுகுனி குமாராக மாறிய அந்த இளைஞர், அப்போதும் அழுதுகொண்டே தன்னை தாக்கியோரை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், போலீஸ் வாகனம் அருகே இருந்த இளைஞனை இழுத்து போலீசார் கண்முன்னே மேலும் ஒரு சாத்து சாத்தினர். 

இதை்தொடர்ந்து போலீசார் அனைவரையும் சமாதானப்படுத்தி, இளைஞரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சினிமா வில்லன் போல் தன்னை நினைத்துக்கொண்டு போதையில் நடுரோட்டில் அலப்பறையைக் கூட்டிய இளைஞர், நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டு வலிதாங்காமல் அழுதபடி போலீசாருடன் சென்றது, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User