பூந்தமல்லியில் சிக்கிய ரூ.2.3 கோடி... தேர்தல் பறக்கும் படை அதிரடி...

வங்கி ஏடிஎம்-க்கு கொண்டு செல்லும் வாகனத்தில் இருந்த ரூ.2.3 கோடியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.

Mar 31, 2024 - 08:41
Updated: 2 years ago
0 172
பூந்தமல்லியில் சிக்கிய ரூ.2.3 கோடி... தேர்தல் பறக்கும் படை அதிரடி...

சென்னை பூந்தமல்லி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.3 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

தமிழ்நாட்டில், வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி அம்சவேணி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வங்கி ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.3 கோடிக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பணம் மற்றும் வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில்,  வட்டாட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் பணம் சரிபார்க்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User