நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.1040 குறைவு 

சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. இதே போன்று வெள்ளி விலையிலும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து உள்ளது. 

Apr 28, 2026 - 04:20
0 248
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.1040 குறைவு 
தங்கம் சவரனுக்கு ரூ.1040 குறைவு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

சென்னையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 1040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User