சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் : இனி விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம்

சபரிமலை ஐயப்ப கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்கள் இருமுடிகளை இனி விமானத்தில் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  

Nov 29, 2025 - 05:51
Updated: 8 months ago
0 185
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் : இனி விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம்
carry Irumudi on flights

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல நாடு முழுவதும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர் . சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  இருமுடி கட்டிக் கொண்டு ஏராளமான பக்தர்கள் இப்போதே சபரிமலை செல்ல தொடங்கி விட்டனர். 

 இதனால் இப்போதே சபரிமலை கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ்கள், ரயில், வேன் உள்பட தனியார் வாகனம் மூலம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏனென்றால் விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும்போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

இந்நிலையில், இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

பக்தர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதிசெய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User