பொன்முடி அமைச்சராக பதவியேற்க ஏற்பாடு : ட்விஸ்ட் கொடுத்து டெல்லி கிளம்பிய ஆளுநர்...
பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க ஏற்பாடுகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அவர் மீண்டும் எம்எல்ஏ பதவியை பெற்ற நிலையில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிட்ட அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றது. இதைத் தொடர்ந்து பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து இன்றைக்குள்(மார்ச்-14) பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (மார்ச் 14) காலை 5.50 மணிக்கு டெல்லி புறப்பட்ட அவர் மார்ச் 16-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். இதனால், பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் பொன்முடி பதவியேற்பு விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஆளுநரின் டெல்லி பயணம் அமைந்தாலும், திமுக உடனான மோதல் போக்கு காரணமாகவே உடனடியாக டெல்லி சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)