ஆட்டம் காட்டும் தங்கம்:சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 

தங்கம் விலை நாளுக்கு நாள் ஆட்டம் காட்டி வருகிறது. இன்று சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

Dec 06, 2025 - 04:28
0 224
ஆட்டம் காட்டும் தங்கம்:சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 
Increase in price of sovereign by Rs. 320

தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 சென்றது. அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி தங்கத்தின் விலை மாறி மாறி வருகிறது.

நேற்றைய தினம்  தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்துக்கும், சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.199-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User