வாரத்தின் கடைசி நாளில் வேலையை காட்டிய தங்கம் : சவரனுக்கு ரூ.2,400 உயர்வு, நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து உள்ளது. 

Feb 28, 2026 - 04:20
0 297
வாரத்தின் கடைசி நாளில் வேலையை காட்டிய தங்கம் : சவரனுக்கு ரூ.2,400 உயர்வு, நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 
சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலையேற்றதால் தங்கம் சவரனு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

நேற்றைய தினம்  தங்கம் விலை சற்றே குறைந்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900 விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200 விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

வாரத்தின் கடைசிநாளான இன்று நகைப்பிரியர்களுக்கு தங்கம் விலை ஏற்றம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User