மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய தங்கம், வெள்ளி: சவரனுக்கு ரூ.1,840 உயர்வு

வாரத்தின் தொடக்க நாளை தங்கம், வெள்ளி தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.1,840-ம், வெள்ளி கிலோவிற்கு ரூ. 15 ஆயிரமும் உயர்ந்து உள்ளது. 

Feb 09, 2026 - 04:27
0 315
மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய தங்கம், வெள்ளி: சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய தங்கம், வெள்ளி

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் கடந்த ஒராண்டு தங்கம் இரண்டு மடங்காக விலை உயர்ந்து, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. 

கடந்த சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வாரத்தின் தொடக்க நாளான இன்று, தங்கம் சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User