"வெயில் வர்றதுக்கு முன்னாடி போய் ஓட்டு போட்டுடுங்க.." பிரதமர் வேண்டுகோள்

வெயில் உச்சத்துக்கு செல்லும்முன் வாக்களித்து விட்டு வீடு திரும்புமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Apr 18, 2024 - 07:59
0 409
"வெயில் வர்றதுக்கு முன்னாடி போய் ஓட்டு போட்டுடுங்க.." பிரதமர் வேண்டுகோள்

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திரமோடி கடிதம் எழுதினார். அதில் மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக வந்த அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் தமிழ்நாடு முழுவதும் பாஜகவை அடிமட்டத்தில் இருந்து உறுதிப்படுத்த அவர் அயராது உழைப்பதாகவும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

இது சாதாரண தேர்தல் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் காங்கிரஸ் ஆட்சியில் அடைந்த துன்பங்களை மக்கள் நினைவுகூர்வர் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

10 ஆண்டுகளில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளதாகவும் இந்தத் தேர்தல் சிறந்த வாழ்க்கையை உறுதிசெய்யும் வகையில் தங்கள் கட்சி உழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பாஜக உழைத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

பாஜக வேட்பாளராக தனது நேரத்தின் ஒவ்வொரு நொடியையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்பதாகக் கூறிய அவர், வெயில் உச்சத்துக்கு செல்லும்முன் வாக்களித்து விட்டு வீடு திரும்புமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User