GV Prakash: ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு… முடிவுக்கு வந்த 11 ஆண்டுகால திருமண உறவு!

இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

May 14, 2024 - 12:52
0 839
GV Prakash: ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு… முடிவுக்கு வந்த 11 ஆண்டுகால திருமண உறவு!

சென்னை: கோலிவுட்டில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ். சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வென்ற அவர், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த அடியே, கள்வன், டியர், ரிபெள் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகின. இன்னொரு பக்கம் சீயான் விக்ரமின் தங்கலான், வீர தீர சூரன் உட்பட பல படங்களுக்கும் பிஸியாக இசைமைத்து வருகிறார். 

இந்நிலையில், ஜிவி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே அவருக்கும் சைந்தவிக்கும் பிரச்சினை என தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அதெல்லாம் பொய்யான செய்திகள் என சொல்லப்பட்டது. அதோடு, ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி தொடர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டே இருந்ததால் அவர்கள் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த சூழலில் ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பரஸ்பர புரிதலோடு பிரிவதாக அறிவித்துள்ளனர். கடந்த 6 மாதங்களாகவே இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்படும் நிலையில், இப்போது வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்களாக இருந்து அதன் பின்னர் காதலிக்கத் தொடங்கினர். இறுதியாக 2013ல் ஜிவி பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2020-ல் தான் ஜிவி தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையான அன்விக்கு தற்போது 4 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது பிரிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இருவருமே, நீண்ட யோசனைக்குப் பின்னர், மன அமைதிக்காகவே இப்படியொரு முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே பல நாட்களாக பிரச்சினை இருந்திருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஹீரோயின்களுடன் நெருக்கமான காட்சிகள் மட்டுமின்றி, லிப் லாக் சீன்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இதுதான் இருவருக்கும் இடையேயான பிரச்சினைக்கு முதல் காரணம் என சொல்லப்படுகிறது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User