GOAT: ‘அநியாயம் பண்ணாதீங்க நண்பா நண்பீஸ்.. விரைவில் சிறப்பான அப்டேட்’: வெங்கட் பிரபு ட்வீட்

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

Mar 26, 2024 - 11:03
0 265
GOAT: ‘அநியாயம் பண்ணாதீங்க நண்பா நண்பீஸ்.. விரைவில் சிறப்பான அப்டேட்’: வெங்கட் பிரபு ட்வீட்

கோட் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதை தெரிந்துகொள்ள விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர். விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், கோட் படத்துக்கு ஏற்கனவே ஹைப் காணப்படுகிறது. இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் பாணியில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா என மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியை களமிறக்கியுள்ளார் வெங்கட் பிரபு.  

கோட் ஷூட்டிங் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்த விஜய்யை மல்லுவுட் ரசிகர்கள் பிரம்மாண்டமாக வரவேற்று மாஸ் காட்டியிருந்தனர். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கோட் படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முக்கியமாக கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள், படத்தின் ரிலீஸ் தேதி ஆகியவை பற்றி அடிக்கடி விவாதமே நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. கோட் அப்டேட் கேட்ட ரசிகர்களுக்காக ட்விட் செய்துள்ள அவர், “அநியாயம் பண்ணாதீங்க! GOAT அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பீஸ். நம்பிக்கையோடு இருங்க, சிறப்பான அப்டேட் ரெடியாக இருக்கு..” என குறிப்பிட்டுள்ளார். இதனால் சீக்கிரமே கோட் படத்தில் இருந்து சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User