GOAT: விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்… GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள்..? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்

விஜய்யின் கோட் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விரைவில் புதிய அப்டேட்டை வெளியிட வெங்கட் பிரபு ரெடியாகிவிட்டார்.

Apr 12, 2024 - 16:39
0 289
GOAT: விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்… GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள்..? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கோட் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளார் விஜய். ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான இந்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக இந்தப் படம் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜூன் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.  

கோட் ரிலீஸ் தேதி உறுதியாகிவிட்டதால் இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய அப்டேட்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என்பது தான் இப்போதைய மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. யுவன் இசையில் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே ரெடியாகிவிட்டது. ஆனால், அதன் ரிலீஸ் தேதி பற்றிய தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தியும் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.  

அதாவது அடுத்த அப்டேட் பற்றிய ஆலோசனையில் என கேப்ஷன் கொடுத்து, வெங்கட் பிரபுவும் ஐஸ்வர்யாவும் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளனர். இதனால் விரைவில் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்பட்டது. எனவே தற்போது ஐஸ்வர்யா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளது கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அப்டேட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User