GOAT Second Single: விஜய் Birthday ஸ்பெஷல்… GOAT அடுத்த அப்டேட் இது தான்!

விஜய்யின் கோட் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு, ஃபர்ஸ்ட் சிங்கிளையும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கோட் படத்தில் இருந்து அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Apr 27, 2024 - 17:18
Updated: 2 years ago
0 3.2
GOAT Second Single: விஜய் Birthday ஸ்பெஷல்… GOAT அடுத்த அப்டேட் இது தான்!
சென்னை: விஜய்யின் 68வது படமாக உருவாகும் கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. படத்தின் டைட்டில், போஸ்டர் என ஒவ்வொரு அப்டேட்டிலும் வெரைட்டி காட்டி வருகிறார் வெங்கட் பிரபு. அதேபோல் விஜய்யும் தனது லுக், ஹேர் ஸ்டைல் ஆகியவற்றை ரொம்பவே மாற்றிவிட்டார்.

இந்நிலையில், கோட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. அதனைத் தொடர்ந்து கோட் படத்தில் இருந்து முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டது. யுவன் இசையில் விசில் போடு என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவரும் போட்டிப் போட்டு டான்ஸில் பட்டையை கிளப்பியிருந்தனர். 

அதேநேரம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளில் யுவனின் இசை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஒருகட்டத்தில் அஜித்தின் மங்காத்தா படத்திற்கு யுவன் கொடுத்த பாடல்களை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதனால் யுவன் அப்செட் ஆகிவிட்டதார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கெல்லாம் சேர்த்து வைத்து ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்க ரெடியாகிவிட்டாராம் யுவன்.

அதன்படி, கோட் செகண்ட் சிங்கிளை யுவன் முடித்துவிட்டதாகவும், அதன் ரிலீஸ் தேதியை வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜூன் 22ம் தேதி கோட் இரண்டாவது பாடல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பாடல் யுவனின் இசையில் மெலடியாக உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி மே மாதம் இறுதியில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User