பிரான்ஸ் கார் பந்தயம்: அஜித்குமார் அணி 13-வது இடம் பிடித்து சாதனை 

பிரான்ஸில் நடைபெற்ற ‘ஏசியன் லெ மான்ஸ்’ கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி 13-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

Jun 13, 2026 - 13:56
0 235
பிரான்ஸ் கார் பந்தயம்: அஜித்குமார் அணி 13-வது இடம் பிடித்து சாதனை 
அஜித்குமார் அணி 13-வது இடம் பிடித்து சாதனை 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார்,  கார் பந்தய வீரராகவும் சர்வதேச பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் பந்தயங்களில்  அதிக கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் துவக்கி உள்ளார்.

இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச கார் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய கார் பந்தய  தொடர்களிலும் அஜித்குமார் அணி தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அவரது தயார் காலமானார். அவரது தயார் மறைவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த அஜித்குமார்.

இறுதிசடங்குகளை முடித்து கொண்டு மீண்டும் சர்வதேச கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றார். அங்கு நடைபெறும்
‘ஏசியன் லெ மான்ஸ்’ கார்பந்தய தொடரில் பங்கேற்க உள்ளார். இந்த கார்பந்தயத்தை பார்க்க  அஜித் குமார் குடும்பத்தினர் பிரான்ஸ் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பிரான்சில் நடைபெற்ற ‘ஏசியன் லெ மான்ஸ்’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற சாதனையை அஜித்குமார் ரேஸிங் அணி படைத்துள்ளது. 13வது இடத்தை பிடித்த நிலையில், வரும் காலங்களில் சிறப்பாக முன்னேறுவோம் என அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User