நம்ம ஊர்ல சூப்பர் ஸ்டார்..! ரஜினியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்... செல்ஃபி எடுத்து உற்சாகம்...

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் காரில் புறப்பட்டுச் சென்றார். 

Feb 29, 2024 - 15:51
0 140
நம்ம ஊர்ல சூப்பர் ஸ்டார்..! ரஜினியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்... செல்ஃபி எடுத்து உற்சாகம்...

திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தை காண ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். 

சென்னையை ஒட்டியுள்ள நாவலூர் பகுதியில் புதியதாக  இடம் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலத்தில் வருகை தந்தார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்களும், ரசிகர்களும் அவரை காண திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திரண்டனர். 

நிலத்தை பதிவு செய்து விட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே  வந்த ரஜினியை கண்டு அவர்கள் ஆரவாரம் செய்தனர்.இதையடுத்து ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் காரில் புறப்பட்டுச் சென்றார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User